'ரெய்டுக்கு' காரணமான 'எட்டப்பன்'-தம்பிதுரை புலம்பல்

கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூர் அதிமுக வேட்பாளர் தம்பித்துரை வீட்டில் நள்ளிரவில் போலீசாரும், தேர்தல் அதிகாரியும் திடீர் சோதனை நடத்தினர். இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அதிகாரிகள் விடிய விடிய சோதனையை நடத்தி முடித்த பின்பே கிளம்பிச் சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த வேட்பாளர் தம்பித்துரை கடும் கோபம் அடைந்தார். மறுநாளே பத்திரிக்கையாளர்களை அழைத்து தனது வீட்டில் நடந்த சோதனைக்கு கரூர் திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமியே காரணம் என்று வெடித்தார்.
இந்த நிலையில், அன்று தான் தேர்தல் செலவுக்கு தர்மபுரியில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து சுமார் ரூ. 25 லட்ச ரூபாய் கரூர் வீட்டிற்கு வந்துள்ளது.
இதை தெரிந்து கொண்ட கட்சிக்காரர் ஒருவர் தான் ரூ. 25 கோடி வந்திருப்பதாக எதிர் தரப்பிடம் போட்டு கொடுத்துள்ளார். மேலும் பணம் வந்த அடுத்த 15வது நிமிடத்தில் எதிர் தரப்புக்கு தகவல் போனது எப்படி என அதிமுகவினர் விசாரணை நடத்திய போது முக்கிய நபர்கள் நால்வரில் ஒருவர் மீது சந்தேகப் பார்வை படர்ந்துள்ளது.
இது குறித்து தலைமைக்கு தெரியப்படுத்திய தம்பித்துரை தேர்தல் முடியட்டும், அதற்கு பிறகு நான் யார் என்று காட்டுகின்றேன் என்று மனம் வெதும்பி சொன்னாராம்.












Click it and Unblock the Notifications