பங்குச் சந்தை-490 புள்ளிகள் உயர்வு!
மும்பை: இந்தியப் பங்குச் சந்தையில் இன்று எதிர்பாராத திடீர் உயர்வு காணப்பட்டது. இதனால் இன்று 490 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்வு கண்டது. மீண்டும் 12000 புள்ளிகளைத் தாண்டியது.
நிப்டியில் இன்று 129 புள்ளிகள் உயர்ந்தன. ஐரோப்பிய பங்குச் சந்தைகள் மளமளவென மீளத் தொடங்கியிருப்பதாலேயே இந்தியச் சந்தையின் இந்த திடீர் உயர்வுக்கு காரணம் என பங்கு வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
தொழில்நுட்பம், கம்ப்யூட்டர், வங்கிகள், ஆயில் அண்ட் காஸ், ரியல் எஸ்டேட்ஸ் மற்றும் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் கைமாறின.
எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, விப்ரோ, பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களின் பங்குகள் நல்ல விலைக்கு கைமாறின.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஓஎன்ஜிசி பங்குகள் மட்டுமே இன்றைய வர்த்தகத்தில் நஷ்டத்தைச் சந்தித்தன.
வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 12158.32 ஆகவும், நிப்டி 3681.35 ஆகவும் நிலைபெற்றது.












Click it and Unblock the Notifications