வென்றால் கங்கை-காவிரியை இணைப்போம்-பாஜக
பொள்ளாச்சி: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கங்கை மற்றும் காவிரி நதி இணைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளர் வி.எஸ்.ரமேஷை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு வெங்கய்யா நாயுடு பேசுகையில்,
காங்கிரஸ் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து நாட்டைப் பின்னோக்கி அழைத்துச் சென்றுள்ளது. நகரத்துக்கும், கிராமத்துக்கும் மிக அதிக வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் மன்மோகன்சிங் பொம்மைப் பிரதமராக உள்ளார். சோனியாகாந்தி சூப்பர் பிரதமராகவும், லாலு பிரசாத் யாதவ் அல்ட்ரா பிரதமராகவும் இருந்தனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்வரை காங்கிரஸ் ஆட்சியை ஆட்டிப் படைக்கும் கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இருந்தது.
காங்கிரஸ் ஆட்சியில் பொதுமக்களின் பணத்துக்குப் பாதுகாப்பில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேசிய நெடுஞ்சாலைகள் 6 வழிச் சாலைகளாக மாற்றப்படும்.
பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் உள்ளது போல் நாட்டில் பெண் குழந்தை பிறந்தால் அதற்கு 18 வயதாகும்போது ரூ. 1.18 லட்சம் வழங்கப்படும்.
தேசத்தில் பயங்கரவாதம் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும். நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட அப்சல் குருவை 100 நாள்களில் தூக்கிலிட ஏற்பாடு செய்யப்படும். அனைத்து மக்களுக்கும் அடையாள அட்டை, பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications