ஈழ படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும்: மிலிபான்ட்
நியூயார்க்: இலங்கையில் பெருமளவில் நடந்து வரும் தமிழினப்படுகொலைச் சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் கூறியுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் இலங்கைப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தை ரஷ்யாவும், சீனாவும் புறக்கணித்து விட்டன.
அதேபோல வியட்நாமும் இதில் பங்கேற்கவில்லை. இந்த நாடுகள் தவிர இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பிற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் டேவிட் மிலிபான்ட் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் வார இறுதியில் நடந்து வரும் படுகொலைச் சம்பவங்கள் பெரும் கவலை அளிக்கின்றன. விரக்தியை ஏற்படுத்துகின்றன.
இந்தப் படுகொலைகள் குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் பேசவுள்ளனேன்.
ஆதாரங்களே இல்லாமல் நடந்து வரும் இனப்படுகொலைப் போர் இது. உடனடியாக சர்வதேச சமுதாயம் இதுகுறித்து அக்கறை காட்ட வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
முதலி்ல் அங்கு படுகொலைச் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும். போர்ப் பகுதியில் சிக்கியுள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இலங்கையிலிருந்து பத்திரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டது குறித்தும் நான் எழுப்பினேன். இதை அனைவரும் கண்டிக்க வேண்டும் என நான் கருதுகிறேன்.
போர் நடைபெறும் பகுதியில் உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய அனைவருக்கும் வாய்ப்பினை இலங்கை அரசு வழங்க வேண்டும். வெளிப்படையாக நடந்து கொள்ள அது முன்வர வேண்டும் என்றார் மிலிபான்ட்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications