ஜெ. மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் தயாநிதி
சென்னை: மத்திய அமைச்சராக இருந்தபோது தான் முறைகேடாக தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியிருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது சென்னை கோர்ட்டில் முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை திமுக வேட்பாளருமான தயாநிதி மாறன் நேற்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது அவரது வீட்டுக்கு 323 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டதாகவும், அந்த இணைப்புகளை சன் டி.வி.யுடன் இணைத்து அதன் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தியதாகவும், இதனால் மத்திய அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த தயாநிதி மாறன், இதுதொடர்பாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவதூறு வழக்கு தொடரப்படும் என ஜெயலலிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
இருப்பினும் சென்னையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் தனது புகாரை மீண்டும் வலியுறுத்திக் கூறினார் ஜெயலலிதா.
இதையடுத்து எழும்பூர் தலைமை சென்னை அமைந்தகரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அதே குற்றச்சாட்டை கூறினார். இதனால் தயாநிதி மாறன் ஜெயலலிதா மீது எழும்பூர் தலைமைபெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஜெயலலிதா மீது அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு ஜூன் 12ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
தயாநிதி மாறன் மீது புகார் கூறிய ஜெயலலிதா இதுதொடர்பாக சிபிஐ சிறப்பு இயக்குநர் எம்.எல்.சர்மா, மத்திய தொலைத் தொடர்புத்துறை செயலாளர் டி.எஸ்.மாத்தூருக்கு எழுதிய கடிதம் ஒன்றை மேற்கோள் காட்டியிருந்தார்.
அதில், தயாநிதி மாறன் தனது வீட்டில் சட்டவிரோதமாக ஒரு தொலைத் தொடர்பு கட்டமைப்பை ஏற்படுத்தியிருந்ததாகவும், அதில் 24 ஐ.எஸ்.டி.என். இணைப்புகள் இருந்ததாகவும், இந்த இணைப்புகளைப் பயன்படுத்தி தனது சன் குழும சானல்களின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியதாகவும் கூறியிருந்தார் ஜெயலலிதா.
இதற்குப் பதிலடியாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அறிக்கை ஒன்றைப் பெற்று வெளியிட்டிருந்தார் தயாநிதி மாறன். அதில் மாறன் வீட்டில் தவறான இணைப்புகள் எதுவும் தரப்படவில்லை என்றும், அவரது பெயரில் எந்த நிலுவைத் தொகையும் இல்லை எனவும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications