தேர்தல் பணி-முதுகுளத்தூரில் அரசு ஊழியர்கள் பஸ் மறியல்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் தேர்தல் பணி ஆணை கிடைக்காத சில அரசு ஊழியர்கள் அப்பகுதியில் திடீரென பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முதுகுளத்தூரில் உள்ள பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி ஆகிய தாலுக்காக்களை சேர்ந்த 1309 அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணி சம்பந்தமாக கடந்த மூன்று நாட்களாக பயிற்சி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தங்களுக்கு தேர்தல் பணி ஆணை கிடைக்கவில்லை என கூறி அரசு ஊழியர்கள் முதுகுளத்தூரில் திடீரென பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருநத தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டாட்டா சுமோ வாகனம் ஒன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
தகவல் அறிந்து முதுகுளத்தூர் தாசில்தார் வரதராஜன், கடலாடி தாசில்தார் சந்திரன், கமுதி தாசில்தார் மங்களநாதன், சப்-இன்ஸ்பெக்டர் பரக்கத்துல்லாஹ் ஆகியோர் அரசு ஊழியர்களை சமாதானம் செய்து பஸ் மறியலை கைவிடச்செய்தனர். இச்சம்பவம் முதுகுளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்துக்கு வந்த மாவட்ட கலெக்டர் வாசுகி நிருபர்களிடம் கூறுகையில்,
தேர்தல் பணிக்காக 20 சதவீதம் பேர் காத்திருப்பவர் பட்டியலில் வைத்திருக்கப்படுவார்கள். ஊழியர்கள் இது தொடர்பான தகவல்களை தாலுகா அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். அதற்காக பஸ் மறியலில் ஈடுபடக்கூடாது. பஸ் மறியல் சம்பந்தமாக விசாரணை செய்யப்படும் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications