அப்பாவித் தமிழர்கள் தொடர் படுகொலை - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கவலை

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது பல மாதங்களாக நடந்து வரும் நிலையில் இதுகுறித்து இங்கிலாந்து, பிரான்ஸ், மெக்சிகோ போன்ற சில நாடுகளின் முயற்சியால் அவ்வப்போது அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விவாதித்து வந்தது.
இந்த நிலையில் முதன் முதலாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், இலங்கை இனப் படுகொலை குறித்து அதிகாரப்பூர்வமாக விவாதித்துள்ளது.
அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்பாவி மக்களைக் காக்க இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் உறுதியுடன் செயல்பட வேண்டும் எனவும் அது கோரியுள்ளது.
புதன்கிழமை கூடிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கை போர் குறித்த விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த விவாதத்தில் சில நாட்களுக்கு முன்பு முள்ளிவாய்க்கால் பகுதியில் விடிய விடிய இலங்கை ராணுவம் நடத்திய மிகக் கொடூரமான பீரங்கித் தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
விவாதத்திற்குப் பின்னர் பாதுகாப்பு கவுன்சில் சார்பி்ல் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், இலங்கையின் வட கிழக்கில் மனிதாபிமான நெருக்கடி மேலும் மோசமடைந்து வருவது குறித்து கவுன்சில் உறுப்பினர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்தனர்.
குறிப்பாக, சமீப நாட்களில் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் உயிரிழந்திருப்பது குறித்து பெரும் கவலை தெரிவிக்கப்பட்டது.
கடந்த பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு, தங்கள் வசம் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற அனுமதிக்க வேண்டும்.
மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் மீது இலங்கைப் படைகள் பீரங்கித் தாக்குதல்களை நடத்துவது கடும் கவலை தருகிறது.
இந்தப் பிரச்சினையை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தனிப்பட்ட முறையில் கையாள வேண்டும் என்ற கோரிக்கைக்கு பாதுகாப்பு கவுன்சில் ஆதரவு தெரிவிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக கவுன்சிலில் இலங்கைப் பிரச்சினை குறித்து விவாதிக்கத் தேவையில்லை. அது உள்நாட்டுப் பிரச்சினை என சீனா, ரஷ்யா, வியட்நாம் உள்ளிட்ட சில நாடுகள் கூறி வந்தன. ஆனால் கடந்த வார இறுதியில் நடந்த மிகக் கொடூரமான தாக்குதலை சுட்டிக் காட்டிய இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான மனிதாபிமான நெருக்கடி இது என்று வலியுறுத்தியதைத் தொடர்ந்து ரஷ்யா போன்ற நாடுகள் விவாதத்திற்கு இறங்கி வந்தன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இந்தத் தீர்மானம் இலங்கையை எந்த வகையிலும் நிர்பந்திக்காது என்ற போதிலும், சர்வதேச அளவிலான அழுத்தம் அதன் மேல் கூடுவதற்கு இது உதவும்.
பாதுகாப்பு கவுன்சில் எடுத்துள்ள முக்கிய தீர்மானம் இது என்று இங்கிலாந்து இந்த தீர்மானத்தை வரவேற்றுள்ளது.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரியா ஆகிய நாடுகள், அமெரிக்காவுடன் இணைந்து இந்த தீர்மானத்தை கொண்டு வந்தன. பாதுகாப்புக் கவுன்சிலில் உள்ள 15 உறுப்பு நாடுகளும் இதை ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications