குடிபோதையில் அமைச்சர் வீட்டில் காரை மோதியவர் கைது
டெல்லி: குடிபோதையில் காரை ஓட்டி மத்திய அமைச்சர் ஒருவரின் வீட்டு சுவரில் மோதியவரை போலீசார் கைது செய்தனர்.
தெற்கு டெல்லி பகுதியில் உள்ள மால்வியா நகரை சேர்ந்தவர் வினய் சிக்கா. நேற்று இரவு அவர் நன்றாக குடித்துவிட்டு தனது தோழியுடன் விலையுயர்ந்த ஸ்கோடா காரில் சானக்யபுரி பகுதியில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது இரவு 10.30 மணியளவில் அவரது கார் நிலை தடுமாறி மத்திய அமைச்சர் ஒருவரின் வீட்டு சுவரில் மோதியது. இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரை கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
அவர் நன்றாக குடித்துவிட்டு வண்டி ஓட்டியுள்ளார். காரில் அதிவேகமாக வந்துள்ளார். சுவரில் மோதுவதற்கு முன்னதாக வரும் வழியில் ஒரு பைக்காரர் மீது மோதியுள்ளார். அதில் அந்த பைக்கை ஓட்டிய ஹேமந்த் குமார் என்பவருக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
ஆனால், வினய் சிக்கா அங்கு வண்டியை நிறுத்தாமல் வந்துவிட்டார். பைக்கை ஓட்டி வந்தவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications