பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து தந்தால் ஆதரவு: 'கண்டிஷன்' போடும் நிதீஷ்
டெல்லி: பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரும் அணிக்கு ஆதரவு தருவேன் என பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதள மூத்த தலைவருமான நிதீஷ் குமார் நிபந்தனை விதித்துள்ளார்.
இந்த நிபந்தனைக்கு காங்கிரஸ் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது ஐக்கிய ஜனதாதளம். இக்கட்சியை இழுக்க காங்கிரஸ் கடுமையாக முயலுகிறது. இதற்கு முக்கிய காரணம், லாலு பிரசாத் யாதவை விட நிதீஷ் குமார் சற்று பிரச்சினை இல்லாதவர். சின்னத்தனமான பேரங்களை முன்வைத்து சிக்கல் ஏற்படுத்த மாட்டார் என்பதும், நிதீஷ் குமாருக்கு தற்போது பீகாரில் நல்ல செல்வாக்கு இருப்பதால் ஐக்கிய ஜனதாதளத்திற்கு அங்கு கூடுதல் சீட் கிடைக்கும் என்பதாலும்தான்.
ஆனால் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதாகவும், இந்தக் கூட்டணியே மத்தியில் ஆட்சி அமைக்கும் எனவும் நிதீஷ் குமார் கூறி வருகிறார்.
இந்த நிலையில் இன்று டெல்லி வந்தார் நிதீஷ் குமார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பீகார் மாநிலத்திற்கு யார் சிறப்பு அந்தஸ்து கொடுத்தாலும் அவர்களை நான் ஆதரிப்பேன் என்று புதிய திருப்பத்தை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான ஆதரவுகளை ஐக்கிய ஜனதாதளம் திரட்டி வருகிறது என்றார்.
நிதீஷ் குமார் இவ்வாறு தெரிவித்த சில நிமிடங்களிலேயே காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், நிதீஷ் குமார் கோரியபடி பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தர காங்கிரஸ் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நிதீஷ்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் பிரதமர் பதவிக்குத் தகுதியானவன் இல்லை. எனக்கு அதுபோன்ற கனவும் கிடையாது என்றார்.
லூதியானாவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நரேந்திர மோடியுடன் பங்கேற்றது குறித்த கேள்விக்கு, அது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏற்பாடு செய்திருந்த கூட்டம். நான் லூதியானாவுக்கு அதற்காகத்தான் போனேன். அங்கு மோடி வந்தார். சந்தித்தோம்.
நான் மோடியைத் தேடி குஜராத்துக்குப் போகவில்லை. அவரும் என்னைத் தேடி பீகாருக்கு வரவில்லை என்றார்.
தனது டெல்லி பயணத்தின் வேறு எந்தத் தலைவரையும் சந்திக்கும் திட்டம் இல்லை எனவும், திருமண வரவேற்புக்காக வந்துள்ளதாகவும் நிதீஷ் தெரிவித்தார்.
பல்வேறு அரசியல் தலைவர்கள் மாறி மாறி சந்தித்து வருவது குறித்து கேள்விக்கு, ஆமாம், ஓட்டு எண்ணிக்கைக்கு ஒரு நாள் இருக்கிறது. அதுவரை சும்மாவா இருக்க முடியும். அதனால்தான் மாறி மாறி சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார் சிரித்தபடியே.
-
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications