பார்வையிழந்த மாணவர் வரலாற்றில் முதலிடம்
திருவண்ணாமலை: கண்பார்வை இல்லாத திருவண்ணாமலை மாணவர் ஒருவர் வரலாற்று பாடத்தில் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்து சாதித்துள்ளார். மேலும் 1,114 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியை சேர்ந் பிளஸ் 2 மாணவர் கோவர்த்தனன். இவர் பிறவியிலே கண்பார்வை இழந்தவர். இதை ஒரு குறையாக நினைக்காத அவர் படிப்பில் சாதிக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.
தொடர்ந்து கடுமையாக உழைத்த அவருக்கு தற்போது நல்ல பலன் கிட்டியுள்ளது. சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் அவர் வரலாறு பாடத்தில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். அவர் அப்பாடத்தில் 197 மதிப்பெண் எடுத்துள்ளார்.
அரசியல் அறிவியல் பாடத்தி்ல் 190 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாவது இடம்பிடித்துள்ளார். மேலும் தேர்வில் மொத்தமாக 1,114 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அனைத்து பாடங்களிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். தமிழில் 182, ஆங்கிலத்தில் 166, புவியியல் 189, பொருளாதாரம் 190 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
தனது எதிர்கால திட்டம் குறித்து அந்த மாணவர் கூறுகையி்ல்,
கண்பார்வை இல்லாமல் போனது துவக்கத்தில் கடினமாக இருந்தது. தற்போது எனக்கு அதுவே ஒரு ஊக்க சக்தியாக மாறிவிட்டது. என்னாலும் எதுவும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
நான் உலகிலே தலைசிறந்த வக்கீலாக வரவேண்டும் என நினைக்கிறேன். ஆனால், எங்கள் வீட்டில் இதற்கு என்னை படிக்க வைக்க வசதியில்லை. அரசு உதவி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளேன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications