சோனியா-ராகுல் மீது மக்கள் நம்பிக்கை: பிரதமர்
டெல்லி: இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம் இந்திய மக்கள் சோனியா மீதும், ராகுல் காந்தி மீதும் வைத்துள்ள அன்பும் நம்பிக்கையும்தான். ராகுல் மறுத்தாலும் அவரை அமைச்சரவையில் சேர்க்க முயற்சிப்பேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
தேர்தல் வெற்றியை அறிவிக்க கூட்டப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது இந்த நாட்டு மக்கள் வைத்துள்ள அன்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளமே இந்த முடிவுகள்.
ராகுல் காந்தியின் தலைமையில் பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளது காங்கிரஸ். குறிப்பாக உத்திரப்பிரதேசம், கேரளா, மேற்கு வங்காளத்தில் ராகுல் பிரமாதமான களப்பணி செய்தார்.
நிச்சயம் ராகுல் காந்தியை புதிய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வேன். அவர் மறுத்தாலும் நிச்சயம் முயற்சி செய்து சேர்ப்பேன், என்றார் மன்மோகன் சிங்.


Click it and Unblock the Notifications
