Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வைகோ படுதோல்வி-ஈரோட்டில் மட்டும் வெற்றி

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விருதுநகர் தொகுதியில், 15 ஆயிரத்து 764 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார்.

முன்பு சிவகாசி என இருந்த தொகுதி தற்போது விருதுநகராக்கப்பட்டது. அதில் வைகோ போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மாணிக் தாகூரும், கார்த்திக்கும் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிட்டனர். தேமுதிக சார்பில் மாபா பாண்டியராஜன் நிறுத்தப்பட்டார்.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே வைகோவுக்கும், மாணிக் தாக்கூருக்கும் இடையே கடும் இழுபறி இருந்தது. ஓரிரு சுற்றுக்களில் மட்டுமே வைகோ முன்னணியில் இருந்தார். மற்ற சுற்றுக்களில் தாகூர் முன்ணியில் இருந்து வந்தார்.

ஆரம்பத்தில் இருவருக்கும் இடையிலான வித்தியாசம் மிக மிக குறைவாகவே இருந்தது. எனவே கடைசி நேரத்தில் எப்படியும வைகோ வென்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் போகப் போக சற்று வாக்கு வித்தியாசம் கூடியதால் வைகோவின் தோல்வி உறுதியானது.

இறுதியில் 15 ஆயிரத்து 764 வாக்குகள் வித்தியாசத்தில் வைகோ தோல்வியைச் சந்தித்தார்.

மொத்த வாக்குகள்: 9,92,060
பதிவானவை: 7,68,108
மாணிக் தாகூர்(காங்.)- 3,07,187
வைகோ (மதிமுக.)- 2,91,423
பாண்டியராஜன்(தேமுதிக.) 1,25,229
கார்த்திக்(பாஜக)- 17,336.

ஈரோடு-கணேசமூர்த்தி வெற்றி:

ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி 47,343 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மதிமுக பொது செயலாளர் வைகோ விருதுநகர் தொகுதியில் தோல்வியடைந்த நிலையில்
ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது
அக்கட்சியினருக்கு ஆறுதல் தந்துள்ளது.

கணேசமூர்த்தி தனக்கு அடுத்து இரண்டாவது இடம் பிடித்த காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனை சுமார் 47,343 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

மொத்த வாக்குகள்: 10,09,860
பதிவானவை: 7,67,011
கணேசமூர்த்தி (மதிமுக) - 2,79,532
இளங்கோவன் (காங்) - 2,32,189
பாலசுப்பிரமணியம் (கொமுபே) - 1,06,165

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+