19ம் தேதி நாடாளுமன்றத்தில் ராஜபக்சே உரை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, 19ம் தேதி காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார். இது டிவி, வானொலியில் நேரடியாக ஒலி, ஒளிபரப்புச் செய்யப்படும் என அந்த நாட்டு அரசு கூறியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டதாக ராஜபக்சே அறிவித்துள்ளார். மேலும், விடுதலைப் புலிகள் வசம் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
இந் நிலையில் பிரபாகரன் குறித்து சில தகவல்களும் வெளியாகியுள்ளன. அது உண்மையா இல்லையா என்று தெரியாத நிலையில் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அதிபர் ராஜபக்சே காலை 9.30 மணிக்கு உரையாற்றுவார், அது டிவி, வானொலியில் நேரடியாக ஒளி, ஒலிபரப்பு செய்யப்டும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இதனால் இதில் மிக மிக முக்கியமான அறிவிப்பு ஏதாவது வெளியாகலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications