பாமக தோல்வி: துரோகமே காரணம்-தங்கபாலு
சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக காங்கிரசுக்கு செய்த துரோகமே பாமக தோல்வியடைந்ததற்கு காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட பாமக, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட்கள் இம்முறை அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டனர். இதில் பாமக 7 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.
இந் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நிருபர்களிடம் கூறுகையில்,
சில அரசியல் சந்தர்ப்பவாதிகள் மக்கள் மத்தியில் தவறான, அவதூறான பிரச்சாரங்களை திட்டமிட்டு பரப்பினர். இதன் காரணமாக சில தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். என்றாலும் கூட பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் ஆதரவளித்து வெற்றி பெற செய்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் தியாகத்திற்கும், பிரதமர் மன்மோகன்சிங்கின் மகத்தான மக்கள் நலப்பணிக்கும் இந்திய மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டுக்கு பிரச்சாரத்துக்கு வந்த சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோருக்கும் முதல்வர் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்த காரணத்தால் தான் பாமக இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இலங்கை பிரச்சினைக்கும் இந்த தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை.
இந்த பிரச்சினையில் அதிமுக சில சக்திகளுடன் சேர்ந்து எதிராக செயல்பட முயற்சித்தது. அது முடியவில்லை. இலங்கை பிரச்சினையில் சுமுக முடிவு காண மத்திய அரசு தொடர்ந்து முயற்சிக்கும்.
ராகுல் எதிர்கால பிரதமர்...
ராகுல்காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்று ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் விரும்புகிறார்கள். தமிழ்நாடு காங்கிரசும் அதைத்தான் விரும்புகிறது. ஆனால் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் பெயரை முன்னிறுத்தி அதனை ராகுல்காந்தியும் வழிமொழிந்திருக்கிறார். ராகுல்காந்தி நிச்சயம் எதிர்காலத்தில் பிரதமர் ஆவார்.
மக்கள் அங்கீகாரம் கிடைத்துள்ளது...
மத்தியில் 5 ஆண்டுகள் நடந்த ஆட்சியையும், மாநிலத்தில் நடந்து வரும் சிறப்பான ஆட்சியையும் மக்கள் அங்கீகரித்துள்ளனர். எதிர்க்கட்சியினர் பரப்பி வந்த இலங்கை தமிழர் பிரச்சினை பற்றிய அவதூறுகளை மக்கள் நிராகரித்து விட்டனர்.
நிலையான ஆட்சியை காங்கிரசால் மட்டுமே வழங்க முடியும் என்பதை மக்கள் உணர்த்தியுள்ளனர். இதன் காரணமாகவே இந்தியாவில் பாஜகவையும், தமிழகத்தில் ஜெயலலிதாவையும் மக்கள் நிராகரித்துவிட்டனர்.
தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும்...
சிவகங்கை, விருதுநகர் தொகுதிகளிலும் ஜனநாயகமுறைப்படி தான் வெற்றி பெற்றுள்ளோம். அந்த அதிகாரிகள் காங்கிரஸ்காரர்கள் அல்ல. நாங்கள் பெற்ற வெற்றி பண நாயகம் என்று கூறும் ஜெயலலிதா, அவர் பெற்ற வெற்றியை என்ன என்று சொல்கிறார். வெற்றி தோல்விகளை நல்ல தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மக்கள் நம்பிக்கைக்கு ஏற்ப தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பணியாற்றும். சில தொகுதிகளில் அந்தந்த தொகுதிகளில் உள்ள பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக தோல்வி அடைந்தாலும், அந்த தோல்விகள் பற்றி ஆராய்ந்து சரி செய்ய முயற்சிப்போம் என்றார் தங்கபாலு.
-
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக்












Click it and Unblock the Notifications