நாடாளுமன்றத்தில் ராஜபக்சே உரை-பிரபாகரன் குறித்து மெளனம்

உரையைத் தமிழில் தொடங்கிய ராஜபக்சே சிங்களத்தில் தொடர்ந்தார்.
அவரது உரையின் விவரம்..
இது நமது நாடு. இந்த நாட்டில் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். இங்கு மத, குல பேதம் இருக்க முடியாது. கடந்த 40 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட மக்கள் ஏராளம். சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் பல பேர் அவர்களால் கொல்லப்பட்டார்கள்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட யுத்தம் தமிழ் மக்களுக்காக நடத்தப்பட்ட யுத்தம். விடுதலைப் புலிகளின் கோரப் பிடியில் இருந்து தமிழ் மக்களை பாதுகாப்பதே எமது நோக்கம்.
இந்தப் போர் விடுதலைப் புலிகள் மீதானது, தமிழ் மக்கள் மீதான போர் அல்ல.
புலிகளிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக ஏராளமான எமது படை வீரர்கள் உயிர் நீத்தார்கள்.
புலிகளை வென்று கிடைத்த இந்த வெற்றி நமது தாயகத்தில வாழும் அனைவருக்கும் கிடைத்துள்ள வெற்றியாகும்.
தமிழ் மக்களை பாதுகாப்புது என் பொறுப்பு. அது என் கடமை. மக்கள் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் இல்லாமல், சம உரிமையோடு, பாதுகாப்போடு வாழ வேண்டும். அது தான் என் நோக்கம்.
நாம் அனைவரும் ஒன்றுபட்டு இந்த நாட்டின் சுதந்திரத்தை கட்டிக் காப்போம்.
நமது நாட்டின் ஜனாதிபதி பிரேமதாச, சிறந்த தலைவர்களில் ஒருவரான லட்சுமண் கதிர்காமர், இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி போன்ற பல தலைவர்களை அவர்கள் கொன்றுள்ளனர்.
இலங்கையில் உள்ள அனைத்து குடிமக்களும் சம உரிமைகளுடன் வாழ வேண்டும். அனைவரும் இணைந்து ஒருங்கிணைந்த, வலிமையான இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும்.
இது இலங்கையின் வரலாற்றில் மாபெரும் வெற்றி தினம். விடுதலைப் புலிகள் முழுவதுமாக ஒழிக்கப்பட்டுவிட்டனர்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு காணப்படும். நாட்டின் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவோம் என்றார் ராஜபக்சே.
ஆனால், புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து ராஜபக்சே எதுவுமே கூறவில்லை.
இதன் பின்னரே பிரபாகரனின் உடல் வீடியோக்களை இலங்கை ராணுவம் வெளியிட்டது.
-
வேலுமணி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா! எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
சொத்து பதிவு பிரச்சனைக்கு தீர்வு.. STAR 3.0 மூலம் தமிழக பதிவுத்துறை கொண்டுவந்த புதிய வசதி -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
தாய்மாமன் என வசனம் பேசிய விஜய்.. குழந்தைகள் பாலியல் மிருகங்களிடம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறாரா? -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications