Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிங்களர்கள் அட்டகாசம்-தமிழ் பெண்களை கேலி செய்து, நகைகளை பறித்து ரவுடித்தனம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: தமிழர்கள் எங்களது சகோதரர்கள், அவர்களைப் பாதுகாக்க வேண்டியது எனது கடமை என்று ராஜபக்சே கூறி வாய் மூடவில்லை. அதற்குள் சிங்கள காலிக் கும்பல் தனது புத்தியைக் காட்டத் தொடங்கி விட்டது.

இனிமேல் இலங்கையில் தமிழர்கள் இப்படிப்பட்ட நிகழ்வுகளைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை சொல்லாமல் சொல்வது போல உள்ளன கொழும்பில் தமிழர்கள் படத் தொடங்கியிருக்கும் அவமரியாதைகளும், அவமானங்களும்.

விடுதலைப் புலிகள் தோற்கடிப்பட்டு விட்டதாக இலங்கை ராணுவமும், ராஜபக்சேவும் கூறியதுமே கொழும்பில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வெள்ளவத்தை, கொல்லுப்பிட்டி, பம்பலப்பிடி, டேஹிவாலா, கோட்டகன்சீனை, மடக்குழு ஆகிய பகுதிகளில் சிங்கள காலிக் கும்பல் ஆட்டோக்களிலும், கிடைத்த வாகனங்களிலும் சிங்களக் கொடியுடன் ஆர்ப்பாட்டமாக புகுந்து போகிற, வருகிற தமிழர்களையெல்லாம் கேலி செய்தும், அவர்கள் மீது தண்ணீர் ஊற்றியும் அடாவடித்தனத்தை ஆரம்பித்தனர்.

தாறுமாறாக வாகனங்களை தமிழர்களை மிரட்டும் வகையில் பேசினர். தமிழ்ப் பெண்களைப் பார்த்து பேசக் கூடாத வார்த்தைகளைக் கூறி அசிங்கப்படுத்தினர்.

உங்க தலைவர் பிரபாகரன் இனிஇல்லை, எல்லாம் முடிந்து போய் விட்டது என்றும், ஆபாசமான வார்த்தைகளாலும் தமிழர்களை வம்பிழுத்தனர்.

மேலும் வீடு வீடாக போய் தமிழர்கள் கையில் சிங்களக் கொடியைக் கொடுத்து வீட்டுக்கு முன்பு ஏற்றுமாறும் கட்டாயப்படுத்தி மிரட்டினர்.

தமிழர்களின் கடைகளை மூட வைத்து பால் பாயாசம் சாப்பிடுமாறு வற்புறுத்தினர்.

இந்த சிங்கள வெறியர்களின் அட்டகாசம் நேற்றும் தொடர்ந்தது, இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறதாம்.

வெள்ளவத்தையில் உள்ள அறத்துசா வீதியில் நேற்று காலை மதுபோதையில் சென்ற சிங்களக் காடையர்கள், வீதியால் சென்ற தமிழ்ப் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகையை வலுக்கட்டாயமாக அறுத்தனர்.

அந்தப் பெண் சத்தம் போட்டுக் கத்தி உதவி கோரியபோது,
சப்தம் வெளியே கேட்காத வகையில் சிங்களத்தில், இலங்கைப் படைகளுக்கு வெற்றி என்று கத்தியவாறு தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்று விட்டது அந்த சிங்கள ரவுடிக் கும்பல்.

வெள்ளவத்தை சாலிமென்ட் வீதியில் நேற்று மாலை நடந்த இன்னொரு சம்பவத்தில், மூன்று சக்கர வாகனத்தில் வந்த காலிக் கும்பல், அப்பகுதியில் வந்த தமிழ்ப் பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியைப் பறித்துச் சென்றது.

கொழும்பு நகரில், சிங்கள வெறியர்களும், அவர்களுக்குத் துணையாக ராணுவத்தினரும் செய்து வரும் காலித்தனத்தால் அங்குள்ள தமிழ் மக்ள் பெரும் பீதிக்குள்ளாகியுள்ளனர். தங்களது நிலை குறித்து பல்வேறு நாடுகளில் வசித்து வரும் தங்களது உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்து கதறுகின்றனராம்.

கொழும்பு நகரில் உள்ள தமிழர்களின் கடை மற்றும் வீடுகளில் பட்டாசுகளை கொளுத்தி போட்டு சிங்கள ராணுவத்தினர் மகிழ்ச்சி கொண்டாட்டம் நடத்தி வருகின்றனர்.

ரோட்டில் நடந்து செல்லும் தமிழ் பெண்கள் மீது தண்ணீர் பாக்கெட்டுகளை பீய்ச்சி அடிக்கும் ராணுவத்தினர் இனி இதை தட்டி கேட்க யார் இருக்கிறார் என்று கேலி செய்கின்றனர்.

யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள தமிழ் குடும்பத்தினருக்கு இனிப்புகளை வழங்கி இதை உங்கள் உறவினர்களுக்கு வழங்கி சந்தோஷமாக பட்டாசு வெடியுங்கள் என்று ராணுவத்தினர் கட்டாயப்படுத்துகின்றனர் என்று வேதனையுடன் கூறுகின்றனர் தமிழர்கள்.

இன்று என்ன நடக்குமோ...

இந்த நிலையில் இன்று வெற்றியைக் கொண்டாட தேசிய விடுமுறையை அறிவித்துள்ளார் ராஜபக்சே. இதையடுத்து சிங்கள இனவெறியர்கள் கொழும்பு நகர் முழுவதும் பட்டாசுகளைக் கொளுத்தியும், சிங்களக் கொடியை ஏற்றியும் அட்டகாசம் செய்து கொண்டிருக்கின்றனர்.

மது பானங்களின் விற்பனையும் பல மடங்கு அதிகரித்துள்ளதாம். இதனால் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தமிழ் மக்கள் பெரும் பீதியில் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இலங்கையில் இனி சிறுபான்மையினர் என்ற வார்த்தைக்கே இடமில்லை, அனைவரும் ஒன்றுதான் என்று நாடாளுமன்றத்தில் ராஜபக்சே கூறிய வார்த்தைக்கு வேறு அர்த்தம் இருக்கிறதோ, என்னவோ..

கொழும்பில் தமிழ் இளைஞர்கள் கைது:

இதற்கிடையே கொழும்பில் தமிழ் இளைஞர்களை தேடுதல் வேட்டை என்ற பெயரில் அந்நாட்டு ராணுவமும், போலீஸும் கைது செய்து வருகின்றன. சனிக்கிழமை முதல் இதுவரை 14 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+