சென்னையில் பஸ் எரிப்பு-இலங்கை அகதிகள் கைது
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மரணம் குறித்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. சென்னையில் அரசு பஸ் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக 8 அகதிகள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மாலையில், செங்குன்றம், புழல் பகுதிகளை இணைக்கும் ஜிஎன்டி சாலையில், புழல் அகதிகள் முகாமைச் சேர்ந்த எட்டு அகதிகள் போராட்டத்தில் குதித்தனர். அங்குள்ள தனியார் கல்லூரி அருகே நின்றபடி பஸ்கள் மீது கல்வீசித் தாக்கினர்.
இதில் ஒரு பஸ்சின் கண்ணாடி உடைந்து சிதறியது. பின்னர் ஒரு பஸ்சைத் தடுத்து நிறுத்தி கண்ணாடியை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள் பெட்ரோல் குண்டை வீசி
தீவைத்து எரித்தனர்.
உடனடியாக விரைந்து வந்த போலீஸார், திணேஷ் குமார், கனகராஜ், நிர்மல், சார்லஸ், ராஜேஷ்குமார், செல்வ மோகன், தனுஷன், லட்சியகாந்தன் ஆகியோரைக் கைது செய்தனர்.
பின்னர் இரவில் செங்குன்றம் சென்ற ஒரு அரசுப் பேருந்தை நான்கு பேர் மறித்து பஸ்சின் முன்பகுதி கண்ணாடியை உடைத்து விட்டுத் தப்பினர். டிரைவர் சோமனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக ராஜ்குமார் என்பவர் சிக்கினார். மற்ற 3 பேரும் தப்பி விட்டனர்.
கடலூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் 13 பஸ்களின் மீது கல் வீசி தாக்கி கண்ணாடிகளை உடைத்ததாக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கும்பகோணத்தில் இருந்து ஆடுதுறை சென்ற டவுன் பஸ் ஒன்றை புளியம்பட்டி அருகே ஒரு கும்பல் நேற்று முன்தினம் இரவு வழிமறித்து கல்வீசி தாக்கியது.
இதே போல கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி சென்ற ஒரு பஸ்சை மருதாநல்லூர் அருகே ஒரு கும்பல் நேற்று முன்தினம் கல்வீசி தாக்கியது.
திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை சென்ற ஒரு பஸ்சும் இதே போல நேற்று முன்தினம் ஒன்பதுபுள்ளி என்ற கிராமம் அருகே தாக்கப்பட்டது. காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை சென்ற ஒரு பஸ் பண்டாரவாடை அருகே வழி மறித்து தாக்கப்பட்டது. இதில் 4 பஸ்களின் கண்ணாடிகளும் பலத்த சேதம் அடைந்தன. இந்த தாக்குதலில் ஒரு பயணியும் காயம் அடைந்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications