ஸ்ட்ரைக்-எம்ஆர்எப் தொழிலாளர்கள் கைது!
சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட எம்ஆர்எப் அரக்கோணம் யூனிட் தொழிலாளர்கள் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
போலீசார் தொழிற்சாலைக்குள் புகுந்து தொழிலாளர்களை லத்தியால் அடித்து இழுத்துக்கொண்டு போய் கைது செய்ததாக ஐக்கிய தொழிலாளர் யூனியன் தலைவர் ஜி.சங்கர் தெரிவித்துள்ளார்.
பிரபல டயர் தயாரிப்பு நிறுவனம் எம்ஆர்எப் குழுமத்தின் அரக்கோணம் மற்றும் புதுச்சேரி தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான புதிய சம்பள உயர்வு குறித்து தங்களைக் கலந்து ஆலோசிக்காமல், தங்கள் எதிர் அணியுடன் பேசி ஒப்பந்தம் போட்டுவிட்டதாகக் கூறி ஐக்கிய தொழிலாளர் யூனியன் வேலை நிறுத்ததில் ஈடுபட்டது.
எந்த யூனியன் பெரியது என்பதில் இரு தரப்புக்குமே பெரும் விரோதம் நிலவும் சூழலில் நிர்வாகம் இப்படி எதிர்தரப்புடன் ஒப்பந்தம் போட்டதால், ஐக்கிய யூனியனுக்கு அது ஈகோ பிரச்சினையாகிவிட்டது.
இதனால் கடந்த மே 9-ம் தேதி முதல் நடக்கும் இந்த வேலைநிறுத்தம், நேற்று கதவடைப்பு என்ற கட்டத்துக்கு வந்தது. இதனால் முழுமையாக உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தொழிற்சாலையின் பணிகளை, ஆட்கள் நடமாட்டத்தைப் பாதிக்காத வகையில் இந்த போராட்டம் இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதுகுறித்த பதில் மனு தாக்கல் செய்யவும் 1 வாரம் அவகாசம் கொடுத்துள்ளது.
'அதற்குள் போலீஸை ஏவி எங்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது நிர்வாகம்' என குற்றம் சாட்டுகிறார் சங்கர்.
அடுத்து தொழிலாளர் ஆணையரைச் சந்தித்து தங்கள் நிலை குறித்து விளக்கவுள்ள இந்த தொழிலாளர்கள், விரைவில் தங்கள் வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் ரேஷன் கார்டுகளையும் இரு மாநில கவர்னர் மற்றும் முதல்வர்களுக்கு அனுப்பி வைத்து தங்கள் எதிர்ப்பைக் காட்டப் போகிறார்களாம்.
எம்ஆர்எப் நிறுவனத்துக்கு சென்னை, அரக்கோணம், புதுச்சேரி, கோட்டயம் மற்றும் மேடக்கில் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications