எம்.பிக்களுக்கான ஜாக்பாட்
சென்னை: இந்தியாவில் தேர்தலில் வென்று எம்.பி. ஆவது என்பது ஒரு ஜாக்பாட் அடித்ததற்கு சமம் தான். மின்சாரம் இலவசம், தொலைபேசி இலவசம் என நினைத்த நேரத்தில் எல்லாம் கிடைக்கிறது. இம்முறை புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இந்த சொகுசு வாழ்க்கையில் மூழ்கிவிடாமல் மக்களையும் பார்த்து கொள்ள வேண்டியது அவசியம்.
இந்தியாவில் எம்.பி. பதவி கிடைப்பது என்றால், அதை விட வேறு ராஜபோக வாழ்க்கை ஏதுமில்லை என சொல்லலாம்.
சமீபத்தில் 15வது நாடாளுமன்ற தேர்தல் முடிந்து 543 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இம்முறை சுமார் 200க்கும் மேற்பட்ட எம்பிக்கள் புது முகங்களாக முதன் முறையாக நாடாளுமன்றம் செல்கின்றனர்.
இவர்கள் 543 பேருக்கும் நம் இந்திய அரசு வழங்கும் சலுகைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஏராளமான சலுகைகளை கொட்டி கொடுக்கிறது.
இதோ அதன் பட்டியல்:
சம்பளம் மாதம் ரூ.16 ஆயிரம், நாடாளுமன்ற கூட்ட தொடருக்கான தினசரி படி ரூ.2 ஆயிரம், தொகுதிகளை பார்வையிட ஒரு நாள் படி ரூ. 20 ஆயிரம், அலுவலகம், உதவியாளர், தபால் செலவு மாதம் ரூ. 20 ஆயிரம் தரப்படுகிறது.
இதுதவிர இலவசமாக டெல்லி விமான பயணம், ரயில் பயணம், வருடத்திற்கு 34 முறை விமான மூலம் குடும்பத்தினரோடு இந்தியா முழுவதும் செல்லலாம்.
ரயிலிலும் இதே போல் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யலாம். 50 ஆயிரம் யூனிட் மின்சாரம், வீட்டிலும், அலுவலகத்திலும் தரைவழி தொலைபேசி ஆண்டுக்கு 50 ஆயிரம் இலவச போன் கால் பேசும் வசதி, 2 செல்போன்கள், மருத்துவ வசதி போன்றவைகள் உண்டு.
இந்தியாவிலுள்ள மத்திய அரசு துறைகளில் போர்டு உறுப்பினர் பதவிகள், இன்னும் பல்வேறு வசதிகள் புதியவர்களின் வரவுக்காக காத்திருக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications