பிரபாகரன் பாதுகாப்பாக உள்ளார்-நல்லகண்ணு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோவில்பட்டியில் அவர் அளித்த பேட்டியில்,

தமிழக அரசு சூழ்ச்சியும், ஆட்சி அதிகார பலத்தையும் கொண்டு தேர்தல் முடிவுகளை முன் கூட்டியே முடிவு செய்தது.
சிவகங்கை, விருதுநகர் தொகுதிகளில் ஆளுங்கட்சி கூட்டணிக்கு ஆதரவாக முடிவுகள் மாற்றப்பட்டுள்ளன.

பண பலத்தைக் கொண்டு வெற்றி நிர்ணயிக்கப்பட்ட சூழ்நிலையில் சில தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளும், எங்கள் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இன்றும் உயிரோடு உள்ளதாக தெரிய வருகிறது. அமைதி பேச்சுவார்த்தைக்கு சென்ற சார்லஸ், நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலித் தலைவர்களை ராஜபக்சே ரசு நயவஞ்சமாக கொலை செய்துவிட்டது.

இலங்கையில் போர் நிறுத்தம் என்ற விஷயத்தில் இந்திய அரசு கண்டிப்பாக இருந்திருந்தால் அப்பாவி தமிழர்கள் காப்பாற்றப்பட்டிருப்பர்கள். இந்த விவகாரத்தில் ஐநா விரைந்து செயல்பட்டு இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்களை காப்பாற்ற வேண்டும். அவர்களின் மறுவாழ்வுக்கு வழி வகை செய்ய வேண்டும்.

எங்களுக்கு வந்த தகவல்படி விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்னும் உயிரோடு பாதுகாப்பாக இருக்கிறார் என்றார் நல்லகண்ணு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+