ராஜபாளையம் நகராட்சி மீண்டும் கலைப்பு-தமிழக அரசு அதிரடி
ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சியை மீண்டும் கலைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
ராஜபாளையம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளது. வார்டு பணிகள் தொடர்பாக நகராட்சி தலைவர் ரத்தினம்மாள் மற்றும் துணைத் தலைவர் மணிகண்டனுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனையடுத்து தலைவர் ரத்தினம்மாளுக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த 17 கவுன்சிலர்களும், துணைத் தலைவர் மணிகண்டனுக்கு ஆதரவாக அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 23 கவுன்சிலர்களும் செயல்பட்டனர்.
இதனால் நகராட்சி கவுன்சில் கூட்டத்தை நடத்துவதிலும், தீர்மானங்களை நிறைவேற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து நகராட்சியை அரசு கலைத்தது. ஆனால், துணைத் தலைவர் மணிகண்டன் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கு முடிவில் ராஜபாளையம் நகராட்சியை கலைத்தது செல்லாது என்றும், இது தொடர்பாக அரசு உரிய விசாரணை மேற் கொண்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி கவுன்சிலர்களின் கருத்துக்களை தமிழக நகராட்சி துறை செயலாளர் கேட்டறிந்தார். மக்களவை தேர்தல் நடைபெற்றதால் அது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், நகராட்சி செயல்படாமல் இருக்க கவுன்சிலர்களின் விளக்கங்களில் திருப்தியில்லை எனவும், எனவே நகராட்சியை கலைத்ததை உறுதி செய்வதாகவும், வரும் 12.11.2009-க்குள் நகராட்சி தேர்தலை நடத்த பரிந்துரை செய்வதாவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் நகலை நகராட்சி துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி அனைத்து கவுன்சிலர்களுக்கும் அனுப்பிவைத்தார்.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்!












Click it and Unblock the Notifications