'செக்ஸ்' டாக்டர் பிரகாசுக்கு 10 ஆண்டு சிறை
சென்னை: சட்டத்துக்கு புறம்பான வகையில் போதை பொருள் வைத்திருந்த வழக்கில் செக்ஸ் டாக்டர் பிரகாசுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவர் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை அண்ணா நகரில் தனியார் மருத்துவமனை வைத்து சிகிச்சை அளித்து வந்த டாக்டர் பிரகாஷ் என்பவர் கடந்த 2001 டிசம்பரில் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து காரணத்துக்காகவும், அதை வைத்து அவர்களை மிரட்டிய குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில் போதை பொருட்கள் வைத்திருப்பதையும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரது மருத்துவமனையில் இருந்து 55 கிராம் எடை கொண்ட ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் அவர் மீது நார்கோடிக் டிரக் சைகோடிராபி சப்ஸ்டன்ஸ் விதி பிரிவு 8 சி மற்றும் 21 பி ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந் நிலையில் ஆபாச படம் எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த ஐந்தரை ஆண்டுகளாக அவர் சிறையில் இருந்து வருகிறார்.
இந் நிலையில் நேற்று போதை பொருள் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன் தனது தீர்ப்பில் கூறுகையில்,
நீதிமன்றத்தில் சாட்சிகள் கொடுத்த வாக்குமூலம் மற்றும் ஆதாரங்களை வைத்து டாக்டர் பிரகாஷ் தான் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 10 ஆண்டு கால கடுங்காவல் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கிறேன். அவர் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்றார்.
ஏற்கனவே ஆபாச படம் எடுத்த வழக்கில் இன்னும் 8 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை மீதமிருக்கும் நிலையில் தற்போது கூடுதலாக 10 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் டாக்டர் பிரகாஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் மீது மோசடி வழக்கு ஒன்று இன்னும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications