நாளை எஸ்எஸ்எல்சி முடிவு- தட்ஸ்தமிழில் பார்க்கலாம்
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின. இதை உங்கள் தட்ஸ்தமிழ் இணையத்தில் நாளை காணலாம்.
பத்தாம் வகுப்புத் தேர்வுகள் கடந்த மார்ச் 23ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 42 ஆயிரத்து 350 மாணவ, மாணவியர் எழுதினர்.
தனித் தேர்வர்களாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.
இந்த நிலையில் நாளை காலை 9 மணிக்கு பத்தாம் வகுப்பு, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓஎஸ்எல்சி ஆகிய தேர்வுகளுக்கான முடிவுகள் நாளை வெளியாகிறது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி., தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தன. இந்த தேர்வுகளின் முடிவு 23-ந் தேதி (நாளை) காலை 9 மணிக்கு வெளியிடப்படும்.
அதேநேரத்தில் மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாக தங்களின் மதிப்பெண் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
பள்ளிக் கல்வித்துறை மற்றும் தேர்வுகள் இயக்குநரகத்தின் பின்வரும் இணையதளங்களிலும் முடிவுகளைக் காணலாம்.
www.pallikalvi.in
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
என்று அந்த அறிக்கையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உங்கள் தட்ஸ்தமிழ் இணையதளத்திலும் நாளை காலை தேர்வு முடிவுகளைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் லேண்ட்லைன் எண் - 1250108 மற்றும் மொபைல் எண் - 1250108 ஆகியவற்றின் மூலமும் முடிவுகளை அறியலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications