பிரபாகரனை உயிருடன் பிடிக்க விரும்பினேன்-ராஜபக்சே
டெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடிக்கவே விரும்பினேன். ஆனால் முடியவில்லை என்று கூறியுள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்சே.
இந்தியா டுடே இதழுக்கு இதுதொடர்பாக அவர் பேட்டி அளித்துள்ளார்.
அதில், பிரபாகரனை உயிருடன் பிடிக்கவே விரும்பினேன். அவரை பிடித்து ராஜீவ் காந்தி கொலை வழக்குக்காக இந்தியாவிடம் ஒப்படைத்திருக்கலாம். அதன் பின்னர் இந்தியாவின் தலைவலியாக அவர் மாறியிருப்பார்.
இருப்பினும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான போரில் வெற்றி பெற்றது நிம்மதியாக உள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது தீவிரவாதிகளை ஒழித்து விட்டோம். இன்று இலங்கை ஒன்றுபட்ட, முழுமையான நாடாக மாறியுள்ளது.
எனது வெற்றி மற்றவர்களைப் போல சாதாரணமானதல்ல. நான் படைகளை ஒன்றுபடுத்தினேன். அவர்களை சுதந்திரமாக போரிட அனுமதி அளித்தேன். முழு ஆதரவும் அளித்தேன்.
போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் இந்தியா முழுமையாக ஈடுபடும். அது எங்களது மிகவும் நெருங்கிய அண்டை நாடு. எனவே அதற்கு அந்தப் பொறுப்பு உள்ளது.
பிற நாடுகளைப் போலவே சீனாவும் எங்கள் நண்பர். அவர்களிடமிருந்து நாங்கள் நிறைய ஆயுதங்களை வாங்கினோம். அதற்காக இந்தியா கவலைப்படத் தேவையில்லை. இந்தியாவுடன் எங்களுக்கு தோழமை மட்டும் இல்லை, நல்ல உறவும் உண்டு என்றார் ராஜபக்சே.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications