அமைச்சரவை: உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் முடிவு-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanithi
சென்னை: மத்திய அமைச்சரவையில் சேருவது குறித்து திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவையில் சேராமல் வெளியிலிருந்து ஆதரவு தருவது என திமுக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து இழுபறி நிலவுகிறது.

இந்த நிலையில் இன்று காலை முதல்வர் கருணாநிதி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

15-வது நாடாளுமன்ற தேர்தல் முடிந்து அமைச்சரவை அமைக்கும் கால கட்டத்தில் டெல்லியிலே உள்ள சில தொலைக்காட்சிகளில் வேண்டும் என்றே திட்டமிட்டு தி.மு.கழக அமைச்சர்களை பற்றி பொய்பிரசாரம் செய்ததை டெல்லி நிருபர்கள் கூட்டத்தில் பிரதமரே விளக்கம் அளித்து மறுத்திருப்பதற்கும் அதை தொடர்ந்து பிரதமரே மத்திய அமைச்சரவையில் தி.மு.கழகம் பங்கு பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்ததற்கும் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழு பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

அமைச்சரவையில் பங்கேற்பது பற்றியும் விவாதித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதனால் விரைவில் திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் கூட்டப்படும் எனத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+