முன்கூட்டியே தொடங்கியது தென் மேற்குப் பருவ மழை - வங்கக் கடலில் புயல் சின்னம்
சென்னை: முன்பு அறிவிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே தென் மேற்குப் பருவ மழை தொடங்கி விட்டது. வங்கக் கடலிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் ஐந்தில் நான்கு மடங்கு மழைப் பொழிவு காலம் தென் மேற்குப் பருவ காலம்தான். வழக்கமாக ஜூன் 1ம் தேதி இந்த மழைப் பொழிவு தொடங்கும். ஆனால் இந்த முறை ஒரு வாரத்திற்கு முன்பாக அதாவது 25ம் தேதியன்று தொடங்கும் என முன்னறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கேரளாவில் பருவ மழை 3 நாட்களுக்கு முன்பாகவே தொடங்கி விட்டது. கேரளா முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.
கேரளாவையொட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கூட ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இந்த ஆண்டு இயல்பான மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் புயல் சின்னம்...
இதற்கிடையே, வங்கக் கடலில் மத்திய கிழக்குப் பகுதியில், பாரதீபா துறைமுகத்திற்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இது புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்குப் பின் வடக்கு ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காளத்தில் பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் பருவ மழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் 24 மணி நேரத்தில் இடியுடன் கூடி மழை இருக்கும். பெரும்பாலான பகுதிகள் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications