கனிமொழி மத்திய அமைச்சரவையில் சேர மாட்டார்?
டெல்லி: மத்திய அமைச்சரவையில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி இப்போதைக்கு அமைச்சரவையில் சேர மாட்டார் எனக் கூறப்படுகிறது.
அவராகவே அமைச்சரவையில் சேராமல் இருக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
மத்திய அமைச்சரவையில் சேர திமுக முடிவெடுத்து விட்ட நிலையில் யார் யாருக்கு எந்தப் பதவி கிடைக்கும் என்பதும் ஓரளவு உறுதியாகத் தெரிய வந்துள்ளது.
மு.க.அழகிரி வேதி மற்றும் உரத் துறை அமைச்சராகவும், தயாநிதி மாறன் ஜவுளித்துறை அமைச்சராகவும், ராசா மீண்டும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகவும் பதவியேற்கக் கூடும்.
இவர்கள் தவிர மற்ற நான்கு இணை அமைச்சர் பதவிகளுக்கு யாரை திமுக தேர்வு செய்துள்ளது என்பது உறுதியாகத் தெரியவி்ல்லை.
ஜெகத்ரட்சகன், ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோரின் பெயர்கள் ஏற்கனவே அடிபட்டு வந்தன என்பது நினைவிருக்கலாம்.
இருப்பினும் தற்போது விஜயன் பெயர் இதில் அடிபடவில்லை. மாறாக நடிகர் நெப்போலியன், முன்பு அமைச்சராக இருந்த பழனி மாணிக்கம், காந்திசெல்வன் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் பதவி ஏதும் தர முடியாது என்று காங்கிரஸ் கூறிவிட்டதால் கனிமொழி பதவியேற்க விரும்பவில்லை என்று தெரிகிறது.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications