மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை எதிர்த்து தேமுதிக வழக்கு

இதுதொடர்பாக பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது நலன் மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 13ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தே.மு.தி.க. போட்டியிட்டது. எந்த கட்சியுடனும் கூட்டு சேராமல் தனித்து போட்டியிட்டது.
இந்த தேர்தலில் முழுக்க, முழுக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த இயந்திரங்களில் முறைகேடுகளும், குளறுபடிகளும் வாக்குப்பதிவின்போது நடைபெற்றன.
மத்திய சென்னை தொகுதியில் எங்கள் கட்சி வேட்பாளரின் சின்னத்துக்கு பட்டனை அழுத்தினால், அது ஆளும் கட்சி வேட்பாளருக்கு சாதகமாக ஓட்டு விழுந்தது. விருதுநகர் தொகுதியில் பதிவான ஓட்டுகளைவிட, கூடுதலாக 26 ஆயிரம் ஓட்டுகள் முறைகேடாக பதிவாகியுள்ளன. திண்டுக்கல் தொகுதியில் தே.மு.தி.க. சின்னத்தின் பட்டனை அழுத்தினால், காங்கிரஸ் வேட்பாளரின் சின்னத்தில் விளக்கு எரிந்தது.
வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்தால் அது முற்றிலுமாக மாற்றப்படவேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. இதுகுறித்து எங்களது கட்சியினர் புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல இடங்களில் 5 ஓட்டுகள் பதிவானால், அதில் ஒரு ஓட்டு ஆளுங்கட்சிக்கு தானாகவே பதிவானது. இதுபோன்று தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரத்தால் முறைகேடுகள் நடந்துள்ளன.
இந்த இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் முழு பயிற்சி அளிக்கவில்லை. ஆகவே, தமிழ்நாட்டில் இனி நடக்க இருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மின்னணு வாக்கு இயந்திரத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.
ஏற்கனவே உள்ள முறையான வாக்கு சீட்டு முறையில் இடைத்தேர்தலை நடத்துமாறு கோர்ட்டு உத்தரவிட வேண்டும். மேலும் எதிர்காலத்திலும் மின்னணு வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தக்கூடாது என்று கோரப்பட்டிருந்தது.
இதைப் பரிசீலித்த நீதிபதிகள் தனபாலன், சுந்தரேஷ் ஆகியோர் இதுகுறித்து 3 வாரத்திற்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசு, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
அதே போல மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை கைவிட வேண்டும் என அதிமுக, பாமக, மனித நேய மக்கள் கட்சி ஆகியவையும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications