அக்னி நட்சத்திர 'கத்திரி' வெயில் முடிந்தது!
சென்னை: கடந்த 4ம் தேதி துவங்கி தமிழக மக்களை வாட்டி வதைத்த கத்திரி வெயில் ஒரு வழியாக இன்றுடன் முடிவடைந்தது.
அக்னி நட்சத்திரம் கடந்த மே 4ல் துவங்கினாலும், சென்னையில் வெயிலின் உக்கிரம் ஏப்ரல் கடைசியில் இருந்தே அதிகம் காணப்பட்டது. மே மாத துவக்த்தில் 100 முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை இருந்த வெயில் 13ம் தேதி அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டு மக்களை வாட்டியது.
வேலூரில் அக்னி நட்சத்திரம் நேரத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதை அறவே தவிர்த்து விட்டனர். இங்கு ஏப்ரல் ஆரம்பத்திலே வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை எட்டிபிடித்து, மக்களை பல வகையான வெக்கை நோய்களுக்கு ஆளாக்கியது.
அங்கு ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்து 20 நாட்கள் உஷ்ணம் 100 டிகிரி பாரன்ஹீட்டை விட்டு இறங்காமல் இருந்தது. அதிகபட்சமாக மே 12ம் தேதி வெப்பம் 111 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது.
இதே போல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்தது. அதுவும் மே இரண்டாவது வாரத்தில் தமிழகம் முழுவதும் வெயிலின் அகோரம் அதிகமிருந்தது.
மதுரை, திருநெல்வேலி, திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், தர்மபுரி, சேலம், தஞ்சாவூர் என அனைத்து ஊர்களிலும் வெயில் 100 டிகிரியை தாண்டியது.
மே 4ம் தேதி துவங்கிய கத்திரி வெயில் 24 நாட்கள் நீடித்து ஒரு வழியாக இன்றுடன் முடிவடைந்தது.
-
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications