திமுக எம்.பி ரித்தீஷுக்கு ஜாமீன் நிபந்தனை தளர்வு
மதுரை: கலாட்டா வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்ற திமுக எம்.பி. ரித்தீஷுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மதுரை உயர்நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
2008ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை விழா நடந்தது.
அப்போது அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில், ரித்தீஷ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவினரைத் தாக்கியதாக கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கமுதி கோர்ட் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. ஆனால் ரித்தீஷ் நிபந்தனையைக் கடைப்பிடிக்கவில்லை. இதையடுத்து அவரைக் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையை அணுகினார் ரித்தீஷ். அங்கு அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த வழக்கு நடந்தபோது ரித்தீஷ் வெறும் நடிகர் மட்டுமே. ஆனால் தற்போது அவர் எம்.பியாகி விட்டார். இதனால் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்க வேண்டும் என்பதால் தனது நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று கோரி ரித்தீஷ் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதைப் பரிசீலித்த நீதிபதி ராஜ இளங்கோ, ரித்தீஷுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை முழுமையாக தளர்த்தி உத்தரவிட்டார்.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications