மணல் கடத்தல்-பொள்ளாச்சி அருகே லாரிகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு மணல்களை கடத்தி சென்ற 10 லாரிகளை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி அருகில் உள்ள பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு சட்டத்துக்கு புறம்பான வகையில் தொடர்ந்து மணல் கடத்தப்படுவதாக பொள்ளாச்சி வட்டாச்சியார் மோகன் குமாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.
இதையடுத்து அந்த மணல் கடத்தல் கும்பலை கையும், களவுமாக பிடிக்க உடுமலை சாலையில் வட்டாச்சியர் தலைமையில் வருவாய்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அவர்கள் அந்த பக்கமாக வந்த லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்தவர்கள் இவர்கள் சோதனையிடுவதை கண்டதும் 10 லாரிகளை அப்படியே நிறுத்திவிட்டு டிரைவர் மற்றும் கிளீனர்கள் தப்பி ஓடினர்.
இதயைடுத்து அந்த 10 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு, கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.












Click it and Unblock the Notifications