தூத்துக்குடியில் ஆயுத கழிவு மூட்டைகள்-இலங்கையில் பயன்படுத்தியதா?
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே 5 மூட்டைகள் ஆயுத கழிவை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இது இலங்கை போரில் பயன்படுத்தியதாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி, தருவைகுளம் அருகேயுள்ள தெற்கு கள்மேடு பகுதியில் கள்ளாடி ஆறு என்ற ஓடை உள்ளது. இந்த ஓடையில் நேற்று முன்தினம் மாலை 5 சாக்கு மூட்டைகள் கிடந்தன. இதை பார்த்த அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக உதவியாளர் பாலகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் தருவைகுளம் போலீசில் புகார் செய்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 5 மூட்டைகளையும் கைப்பற்றி சோதனை நடத்தினர். இதில் சுமார் 350 கிலோ எடையுள்ள துப்பாக்கிகள், தோட்டாக்கள், ரைபிள்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்ட காலி உறைகள் இருந்தன. இவை அனைத்தும் செம்பு, மற்றும் தகரம், இரும்பால் செய்யப்ட்டிருந்தது.
இதனை கைப்பற்றிய போலீசார் இவை இங்கு எப்படி வந்தது, பழைய இரும்பு வியாபாரிகள் பதுக்கி வைத்திருக்கிறார்களா, அல்லது இலங்கை போரில் பயன்படுத்தப்பட்டதா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளத்துர் அருகேயுள்ள கண்மாயில் 3 மூட்டை ஆயுத கழிவுகள் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட ஆயுத கழிவுகளை பயன்படுத்த தடை விதித்துள்ள நிலையில் ஆயுத கழிவுமூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications