சென்னையில் 2வது நாளாக கடல் கொந்தளிப்பு-மீனவர்கள் தவிப்பு
சென்னை: சென்னையில் இன்றும் இரண்டாவது நாளாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. சில கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாமல் தவித்தனர்.
சென்னையில் நேற்று திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. நகரம் முழுவதும் பலத்த சூறைக் காற்று வீசியது.
சுமார் 20 அடி உயரத்தில் ராட்சத அலைகள் எழுந்து, கரையில் நிறுத்தப்பட்டு இருந்த படகுகளையும், கட்டுமரங்களையும் கடலுக்குள் இழுத்துச் சென்றன. பின்னர் பல மடங்கு அதிக வேகத்தில் அவை கரை ஒதுக்கின. இதில் பல படகுகள் சேதமடைந்தன.
திருவொற்றியூர், மெரினா, நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம், பெசன்ட்நகர் பகுதிகளில், கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. பல பகுதிகளில் கிராமங்களுக்கு நீர் புகுந்தது.
இந் நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் எண்ணூர், எர்ணாவூர் குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம், தாழங்குப்பம் ஆகிய கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர்.
கடலின் சீற்றம் மீண்டும் அதிகரித்ததை அடுகத்து மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் கடல் சீற்றம் ஏற்படும். ஓரிரு நாட்களுக்கு பின் சீற்றம் குறைந்து கடல் சகஜ நிலைக்கு திரும்பிவிடும். இதை மீனவர்கள் 'வைகாசி வாங்கல்' என அழைக்கிறார்கள்.
-
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications