பெங்களூரில் இறங்காமல் சென்னைக்கே திரும்பிய விமானம்
சென்னை: பெங்களூரில் மோசமான வானிலை நிலவியதால், அங்கு தரை இறங்க முடியாமல், மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது கிங்பிஷர் விமானம்.
நேற்று பிற்பகல் 2.45 மணிக்கு சென்னையிலிருந்து அந்த கிங்பிஷர் விமானம் பெங்களூருக்கு கிளம்பியது. பெங்களூரை அடைந்த நிலையில் அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக விமானத்தால் தரையிறங்க முடியவில்லை.
இதையடுத்து சிறிது நேரம் வானில் சுற்றிய விமானம், மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து மாலை 4.15 மணியளவில் இறங்கியது விமானம். பெங்களூர் வரை போய் அங்கு இறங்காமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியதால் பயணிகள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.
இதுகுறித்து ஒரு விமானி கூறுகையில், கொச்சி, பெங்களூர் போன்ற பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்யும் காலமாகும். இதனால் இதுபோல விமானங்கள் திருப்பி விடப்படுவது சகஜமானதுதான்.
விமானிகள் விமானத்தை கிளப்புவதற்கு முன்பே வானிலை அறிக்கை தரப்படுவது வழக்கம்தான். ஆனால் வானிலை சரியாகி விடும் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் செல்கிறோம். இருப்பினும் இறங்க முடியாத நிலை ஏற்படுகிறபோது இதுபோல திரும்ப நேரிடுகிறது என்றார்.
சமீபத்தில் இதேபோலத்தான் மங்களூலிருந்து கொச்சி போன விமானம் ஒன்றும் திருப்பி விடப்பட்டதாம்.
ஆனால் பெங்களூர் வரை போய் சென்னை திரும்பிய விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு, தாங்கள் மீண்டும் சென்னைக்கே திரும்பிச் செல்வது குறித்து தெரிவிக்கப்படவில்லையாம். மொத்தம் 34 பயணிகள் விமானத்தில் இருந்தனர்.
-
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை












Click it and Unblock the Notifications