தூத்துக்குடியில் 19 எஸ்ஐ உள்பட 73 போலீசாருக்கு பணிமாற்றம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் 19 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 73 போலீசார் பணியிடம் மாற்றம் செய்து எஸ்பி தீபக் டமோர் உத்தரவிட்டார்.
விளாத்திகுளம் சப்-இன்ஸ்பெக்டர் மாரித்தாய் ராணி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பா மாவட்ட குற்றபிரிவுக்கும், ஸ்ரீவைகுண்டம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி முத்தையாபுரத்துக்கும், முத்தையாபுரம் செல்வராணி தெர்மல்நகருக்கும், குலசேகரபட்டிணம் சங்கரேஸ்வரி ஆத்தூருக்கும், தெர்மல் நகர் சுப்புலெட்சுமி குலசேகரபட்டிணத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புளியம்பட்டி சங்கரநாராயணன் முறப்பநாடு காவல் நிலைத்திற்கும், ஏரல் செல்லையா சாயர்புரத்திற்கும், தூத்துக்குடி வடபாகம் ராமசாமி மாவட்ட குற்ற பிரிவுக்கும், தாளமுத்து நகர் புகழும்பெருமாள் வடபாகத்துக்கும், ஏரலில் பணிபுரிந்து வந்த சங்கரநாராயணன் கண்ட்ரோல் ரூமுக்கும், பாலசுப்பிரமணியன் குரும்பூருக்கும், குரும்பூர் இசக்கியப்பன் திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்திற்கும், புதூர் சுடலை கண்ட்ரோல் ரூமிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் பணிபுரிந்து வந்த 29 ஏட்டுகள், 25 போலீசாரும் பணிமாற்றம் செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications