பொறியியல் நுழைவுத் தேர்வு - சென்னை மாணவர் 8வது இடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அகில இந்திய பொறியியல் நுழைவு தேர்வில் சென்னை மாணவர் பிரசாந்த் 8வது இடம் பிடித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 26ம் தேதி இந்தியா முழுவதும் 1,460 மையங்களில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அகில இந்திய பொறியியல் நுழைவு தேர்வை எழுதினர். இதன்மூலம் நாட்டின் தலைசிறந்த ஐஐடிக்களில் படிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

இத்தேர்வில் கேள்விகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 120லிருந்து 90 ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு நெகட்டிவ் மதிப்பெண் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த ஆண்டு கேள்வி தாள் வழக்கத்தை விட கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று நுழைவு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் சென்னை மாணவர் பிரசாந்த் என்பவர் தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 8வது இடமும் பிடித்துள்ளார். இவர் முன்னதாக நடந்த ஐஐடி-ஜெஇஇ நுழைவு தேர்வில் 5வது இடம் பிடித்திருந்தார்.

மைலாப்பூர் பிஎஸ் சீனியர் மேல்நிலை பள்ளியில் படித்த இவர் சிபிஎஸ்இ தேர்வில் 491 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். சென்னை ஐஐடியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜியனிரிங் படிக்க திட்டமிட்டுள்ளார்.

சென்னை மைலாப்பூர் வித்யா மந்திர் மாணவர் அக்சய் ரங்கமணி தமிழக அளவில் இரண்டாவது இடமும், இந்திய அளவில் 89வது இடமும் பெற்றுள்ளார். இவர் சென்னை ஐஐடியில் எலக்ட்ரிகல் என்ஜினியரிங் படிக்க இருக்கிறார்.

இத்தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்றவர்களுக்கு மாநில பொறியியற் கல்லூரிகளிலும் 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+