அன்புமணி கட்டுப்பாட்டை நீக்கினார் ஆசாத்-சினிமாவில் தம் அடிக்க தடை இல்லை!
டெல்லி: இந்தி சினிமாவில் கற்பழிப்பும், வன்முறையும் தாண்டவமாடி வருகிறது. இதை விடவா புகை பிடிக்கும் காட்சிகள் சமூகத்தை சீரழித்து விடப் போகிறது. எனவே இதுபோன்ற அமல்படுத்துவதற்கு நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயங்களை நான் கடைப்பிடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்.
கடந்த அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ், ரஜினிகாந்த், ஷாருக் கான் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்கள் சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார். அத்தோடு நில்லாமல் சினிமாவில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளை தடை செய்யவும் அவர் உத்தரவிட்டார்.
அன்புமணியின் கோரிக்கையை உடனே ஏற்ற ரஜினிகாந்த், புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதையே விட்டு விட்டார். அவரைப் பின்பற்றி விஜய்யும் கூட அதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டார்.
ஆனால் மும்பை திரையுலகினர் அன்புமணி உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக ஷாருக்கானுக்கும், அன்புமணிக்கும் இடையே கடும் வாதமே நடந்தது. ஷாருக் கான் தொடர்ந்து தம் அடித்துக் கொண்டுதான் உள்ளார். ஸ்டேடியங்களில் தம் அடித்தும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் குலாம் நபி ஆசாத் மூலம் திரையுலக ஹீரோக்களுக்கு 'ஆசாத்' கிடைத்துள்ளது. புதிய சுகாதாரத் துறை அமைச்சராகியுள்ள குலாம் நபி ஆசாத், நடைமுறைக்கு சாத்தியமில்லாதவற்றை தான் கடைப்பிடிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
சினிமாவில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளை தடுப்பது என்பது அறிவீனமான செயல் என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு. அதற்கும், புகை பிடித்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இந்தி சினிமாக்களில் கற்பழிப்பும், வன்முறையம் தாண்டவமாடுகிறது. அவற்றை விடவா புகை பிடித்தலால் ஒரு சமூகம் கெட்டுப் போய் விடப் போகிறது.
புகை பிடிப்பது போன்ற காட்சிகளைக் காட்டுவதால் இளைஞர்கள் கெடுவார்கள் என்றால், கற்பழிப்பு, வன்முறை காட்சிகளைப் பார்த்தால் யாரும் கெட மாட்டார்களா. இது அறிவீனமான வாதம்.
அதற்குப் பதில் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்து அதை தீவிரமாக கடைப்பிடிக்கலாம். புகை பிடித்தலால் ஏற்படும் தீமைகள் குறித்து தீவிரமாக பிரசாரம் செய்யலாம்.
எனவே, இதுபோன்ற சாத்தியமே இல்லாத கொள்கைகளை எனது துறை கடைப்பிடிக்காது என்று கூறியுள்ளார் ஆசாத்.
குலாம் நபி ஆசாத்தின் இந்த பேச்சு, புகை பிடித்தலுக்கு எதிராக பாடுபட்டு வரும் பல்வேறு சமூக நல அமைப்புகளின் கடும் அதிருப்தியைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதேசமயம், ஷாருக் கான் இனிமேல் நிம்மதியாக தம் அடிக்கலாம்!
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications