ரூ. 25 லஞ்சம்-20 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு!
டெல்லி: கடந்த 1989ம் ஆண்டு ரூ. 25 லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட சுபைர் என்ற கேரளாவை சேர்ந்த அரசு ஊழியர் குற்றமற்றவர் என்று 20 ஆண்டுகளுக்கு பின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரளாவை சேர்ந்த சுபைர் என்பவர் கடந்த 1989ம் ஆண்டு அம்மாநிலத்தில் உள்ள துணை மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் கிளர்க்காக பணியாற்றினார். அப்போது அவர் மனாப் என்பவரிடம் ரூ. 25 லஞ்சம் வாங்கியதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு தொடுத்து ஏப்ரல் 24, 1989ம் ஆண்டு அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் நீதிமன்றம் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் கொச்சினில் இருக்கும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அங்கும் அவர் எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சர்புர்கர் மற்றும் லோதா அடங்கிய பெஞ்ச் அவர் நிரபராதி என தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில்,
அரசு தரப்பு கொடுத்த சாட்சிகள் போதுமானதாக இல்லை. தரமற்ற, நம்பகத்தன்மை இல்லாத இது போன்ற சாட்சியங்களை வைத்து கொண்டு ஒருவர் மீது குற்றம்சாட்ட முடியாது. இதனால் அவரை விடுதலை செய்கிறோம் என தீர்ப்பு வழங்கினர்.
இதையடுத்து ரூ. 25 லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட சுபைர் 20 ஆண்டுகளுக்கு பின் தன் மீது சுமத்தப்பட்ட பழியில் இருந்து விடுதலை ஆனார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications