தடுமாறிய சென்செக்ஸ்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: சென்செக்ஸில் இன்று லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை என்ற நிலை. காலையில் வீழ்ச்சியில் துவங்கிய மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் பிற்பகலுக்குப் பிறகே லேசாக மீட்சியடைந்தது.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 34 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 14874-ல் நிலைப் பெற்றது. ஆனால் நிப்டியில் வீழ்ச்சி தொடர்ந்தது. 4.65 புள்ளிகள் குறைவாகவே நிப்டி நிலைபெற்றது.
நடுத்தரப் பங்குகளிலும் லாபம்- நஷ்டமற்ற தன்மையே நிலவியது.
டாடா ஸ்டீல், எச்டிஎப்சி, ஸ்டெர்லைட், மகிந்திரா அண்ட் மகிந்திரா பங்குகள் சுமாரான லாபத்துடன் கைமாறின.
ரான்பாக்ஸி, டில்எப், டாடா பவர், ரிலையன்ஸ் இன்பரா, ஏசிசி போன்ற பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன.
இபங்குச் சந்தையின் நிலையற்ற தன்மை இன்னும் முற்றாக நீங்கிவிடவில்லை என்பதையே இது காட்டுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications