ஏர் இந்தியாவை தனியார் மயமாக்க முயற்சியா?
மும்பை: ஏர் இந்தியா நிறுவனம் புதிய பங்குகளை வெளியிடுவது தனியார்மயமாக்கலை ஊக்கப்படுத்த அல்ல. மாறாக நிறுவனத்துக்குத் தேவையான அதிகபட்ச முதலீட்டைப் பெறவும் நிதி நெருக்கடியில் சிக்கி மற்ற நிறுவனங்களைப் போல தடுமாறாமல் இருப்பதற்காகவுமே என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறியுள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனம் புதி்ய பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது.
காரணம் கடந்த ஆண்டு மட்டும் இந்த அரசுத் துறை விமான நிறுவனத்துக்கு ரூ. 4,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விமான எரிபொருள் விலை ஏற்றம், பயணிகள் குறைவு போன்றவற்றால் இந்த நிலை. இதைச் சரிகட்ட இந்த ஆண்டு புதிய முதலீடுகளைச் செலுத்த முடிவு செய்த ஏர் இந்தியா, இதற்காக ரூ. 1,231 கோடிக்கு புதிய பங்குகளை வெளியிடவும், ரூ. 2750 கோடிக்கு புதிய கடன்கள் வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு திட்ட வரைவை அனுப்பியது.
இதில் சில திருத்தங்களைச் சொன்ன மத்திய அரசு, இப்போதைக்கு புதிய பங்குகள் வெளியிட மட்டும் அனுமதி கொடுத்துள்ளது. புதிய கடன்கள் குறித்து சில ஆட்சேபங்களை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், விமான நிறுவனத்தை தனியாருக்கு முற்றாக தாரை வார்க்கும் முயற்சி இது என பலவித விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
இது குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறியதாவது:
ஏர் இந்தியாவை தனியாருக்கு தாரை வார்க்க நாங்கள் முயலவில்லை. இந்த பங்கு வெளியீடு மூலம் ஏர் இந்தியா தனது மூதலீட்டுத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஆனால் இந்தப் பங்குகளை சந்தையில் விடுவது உடனடியாக நடந்துவிடாது. பங்குச் சந்தை நிலையாக மாறிய பிறகே நடக்கப் போகிறது.
சொல்லப் போனால், இனி எந்த விமான நிலையத்தையும் தனியார்மயமாக்குவதில்லை என்ற புதிய முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். ஏர் இந்தியா எப்போதும் அரசுத் துறை நிறுவனமாகவே தொடரும் என்றார்.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வங்கி கடன் செட்டில்மென்ட்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications