நிருபரை கடத்தி இலங்கை அரசு கொடுமை!

இலங்கை அரசின் உளவுப் பிரிவினர் தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
பொட்டல ஜெயந்தா என்ற அந்த நிருபர் கொழும்பில் உள்ள நெகெகொடா அருகே தனது வீட்டருகே நேற்று ஒரு கும்பலால் வேனில் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டார்.
மேலும் அவரது தாடியையும் முடியையும் வெட்டி எரிந்த அந்தக் கும்பல் சில கி.மீ தூரத்தில் வேனில் இருந்து இவரை தூக்கி எறிந்துவிட்டு தப்பிவிட்டது. இதில் அவருக்கு தலை, காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இலங்கை பத்திரிக்கையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ள இவர் பத்திரிக்கை சுதந்திரத்துக்காகவும், அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருபவர்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் உடல் நலம் தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கடத்தல் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இதற்கு முன்பும் ஜெயந்தாவை அரசு ஆதரவு கும்பல் ஒன்று கடத்த முயன்றுள்ளது. இதையடுத்து இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாட்டில் வசித்து வந்த இவர் சமீபத்தில் தான் நாடு திரும்பினார்.
இலங்கை அரசின் அடக்குமுறைகளால் கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை 20க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications