விண்ணப்பித்த 60 நாட்களில் ரேசன் அட்டை-வேலு

பொது வினியோகத்துறை நிர்வாகம் குறித்து இன்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய பின் நிருபர்களிடம் பேசிய வேலு,
புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தணிக்கை செய்து 30 நாட்களுக்குள் வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு 60 நாட்களில் கார்டை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.
விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டால் அதற்கான காரணங்களை விண்ணப்பத்தாரர்களுக்கு தபால் மூலம் தெரிவிக்க வேண்டும்.
போலி குடும்ப அட்டைகள் தொடர்பாக வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த வேண்டும். போலி என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே ரத்து செய்ய வேண்டும்.
நியாய விலை கடைகளில் பாமர மக்கள் அறியும் வகையில் விலைப்பட்டியல் வைக்க வேண்டும். மாவட்ட வழங்கல் அலுவலர்கள் தினந்தோறும் 5 நியாய விலை கடைகளை சோதனையிட்டு ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்லும் லாரிகள் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் தான் இயக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
நீண்ட தூரத்துக்கு செல்ல வேண்டிய லாரிகளை காலை 9 மணிக்கே அனுப்ப வேண்டும். மாலை 4 மணிக்கு மேல் லோடு ஏற்றி அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications