திருச்சி மேயராக சுஜாதா போட்டியின்றி தேர்வு!
திருச்சி: திருச்சி மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஜாதா இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
திருச்சி மாநகராட்சி மேயராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாருபாலா தொண்டைமான், திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து காலியான மேயர் பதவிக்கு இன்று தேர்தல் நடந்தது. இதற்கான வேட்பாளரை தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சியில் பெரும் கோஷ்டி மோதல் நடந்தது.
இறுதியாக நேற்று தான் திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலரான சுஜாதா (38) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 கவுன்சிலர்களில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 40 கவுன்சிலர்களும், அதிமுக கூட்டணிக்கு 20 கவுன்சிலர்களும் உள்ளனர். இதனால் சுஜாதாவை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.
இதைத் தொடர்ந்து இன்று நடந்த தேர்தலில் சுஜாதா போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. கவுன்சிலரான சுஜாதா, திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயலாளராகவும் உள்ளார்.
இவரும் சாருபாலாவைப் போலவே மத்திய அமைச்சர் வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவர் ஆவார்.
-
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications