'ரெளடிகள்': ஒடுக்க கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் அதிரடி

மிக நேர்மையான அதிகாரியான இவர் சென்னை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் தமிழக சட்டம்- ஒழுங்குப் பிரிவின் கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
சென்னை கமிஷனராக இருந்த போது நகரில் ரெளடிகள் ஒழிப்பில் தீவிரம் காட்டிய இவர் இப்போது மாநிலம் முழுவதுமே ரெளடிக் கும்பல்களை கட்டுப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள ரெளடிகள் பட்டியலை கேட்டு மாவட்ட எஸ்பிக்கள், நகர கமிஷ்னர்களுக்கு உத்தரவு அனுப்பியுள்ள இவர், அவர்களை 3 பிரிவுகளாக பிரிக்குமாறு கூறியுள்ளார்.
தொடர் குற்றங்களில் ஈடுபடும் ரெவுடிகள், கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் ரெளடிகளை 'ஏ' பிரிவில் இடம் பெறுவர். இவர்களை கூண்டோடு குண்டர் சட்டத்தில் பிடித்துத் தள்ள ராதாகிருஷ்ணன் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களுக்கு குறைகளை தெரிவிக்க வரும் பொதுமக்களை மரியாதையாக நடத்த வேண்டும். புகார்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.
ரெளடிகளை அவர்களது செயல்பாடுகளின் அடிப்படையில் ஏ, பி, சி, என 3 பிரிவுகளாகப் பிரித்து லிஸ்ட் கேட்டுள்ளேன்.
தொடர்ந்து கொலை குற்றங்கள் மற்றும் பிறரைத் தாக்கும் செயல்களில் ஈடுபடுவோர் 'ஏ' பிரிவில் இடம் பெறுவர். இவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
'பி', 'சி' பிரிவுகளில் இடம் பெறும் ரெளடிகளை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட்டால் அவர்களது பெயரும் 'ஏ' பிரிவில் சேர்க்கப்படும்.
ரெளடிகளை ஒழிக்க முன்னுரிமை கொடுக்கப்படும்.
மேலும் வழக்குகளில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளின் பட்டியலை தயார் செய்து அவர்களை உடனடியாக தேடிக்கண்டு பிடித்து கைது செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
வழிப்பறியில் ஈடுபடும் குற்றவாளிகளையும் ஏ, பி, சி என மூன்று பிரிவுகளில் சேர்ப்போம். இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டால் போலீஸ் நடவடிக்கை உறுதி.
அதே போல கள் இறக்குவோர், கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கோவையில் மதக் கலவரம் நடந்தவுடன் அங்கு இவரைத் தான் கமிஷ்னராக நியமித்தார் அப்போதைய ஆட்சியில் இருந்த முதல்வர்
கருணாநிதி. அங்கு மதக் கலவரங்களை ஒடுக்கியதோடு, மதவாதக் கும்பல்களையும் அடக்கி, மீண்டும் அப்படி ஒரு சம்பவம் நடக்காமல் தடுத்தவர் ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications