காதல் தோல்வி-நடு ரோட்டில் தீக்குளித்த வாலிபர்
சென்னை: காதல் தோல்வி காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுரோட்டில் ஒரு வாலிபர் தீக்குளித்தார்.
நுங்கம்பாக்கம் திருமூர்த்தி நகர் 2வது தெருவில் இன்று காலை 8 மணியளவில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு டாங்கி்ல் இருந்த பெட்ரோலை ஒரு பாட்டிலில் பிடித்தார்.
பின்னர் அந்த பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். உடலில் தீப் பிடித்ததும் அலறிக் கொண்டு அங்கும், இங்கும் ஓடினார்.
இதைப் பார்த்த பொதுமக்கள் அவர் மீது நீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். உடனடியாக போலீசாருக்கும் தகவல் தந்தனர்.
போலீசார் ஆம்புலன்சுடன் வந்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் பெயர் சுரேஷ் குமார் (23) என்றும், கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர் என்றும் தெரிய வந்தது.
ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்க உள்ளதை அறிந்து அவரை தன்னை திருமணம் செய்து கொள்ள அழைத்ததாகவும், அதற்கு
அதற்கு அந்த பெண் மறுத்ததால், நீ இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன் என்று கூறியதாகவும், அதற்கு அந்தப் பெண் நீ என்ன ஆனாலும் எனக்குக் கவலையில்லை என்று கூறியதால் மனம் நொந்து போய் தீக்குளித்ததாகவும் கூறியுள்ளார்.
அந்தப் பெண்ணின் பெயரை போலீசார் வெளியிடவில்லை. வாலிபர் உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications