மபி காவல் நிலையத்தில் போலீசாரால் பெண் கற்பழிப்பு
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் காவல் நிலையத்தில் வைத்து ஒரு பெண்ணை கற்பழித்ததாக 4 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் பீடேல் மாவட்டத்தில் ஜம்பாரா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 45 வயதான பெண் ஒருவரை போலீசார் கடந்த 2ம் தேதி மருமகளிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறி கைது செய்தனர்.
இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி அவரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார். ஆனால், போலீசார் அந்த பெண்ணை சிறையில் அடைக்காமல், அம்லா காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அதுவும் மாலை 6 மணிக்கு மேல் சிறையில் தங்க வைத்துள்ளனர்.
மறுநாள் 3ம் தேதி காலை அந்த பெண்ணை சிறையில் கொண்டு சென்று அடைத்துள்ளனர். அப்போது அந்த பெண் அம்லா காவல் நிலையத்தில் வைத்து நான்கு போலீசார் தன்னை கற்பழித்ததாக குற்றம்சாட்டினர். இதையடுத்து அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அந்த பெண்ணின் புகார் உண்மை என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட நான்கு போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர். அந்த பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லவில்லை என்றும், அன்று இரவு தாங்கள் யாரும் பணியில் இருக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவி்த்தனர்.
மேலும், அந்த பெண், மருமகளை கொடுமைப்படுத்தி சித்திரவதை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் இருந்து தப்பிக்க அந்த பெண் இது போன்ற தவறான குற்றச்சாட்டுக்களை போலீசார் மீது சுமத்தி அனுதாபம் பெற பார்க்கின்றார் என்றனர்.
போலீசார் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டு உண்மையென நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அப்பகுதி கூடுதல் டிஐஜி வி.கே.பவார் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications