துப்பாக்கிச் சூட்டில் தாவூத்-சகோதரர் படுகாயம்?

பாகிஸ்தானின் கராச்சி நகரில் கிளிப்டன் பகுதியில் அல் ஹபீப் வங்கியின் அருகே உள்ள தாவூதின் வீட்டுக்கு வெளியே நேற்றிரவு அனீஸ் மீது பலுசிஸ்தானைச் சேர்ந்த ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த தாவூத் மீதும் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சண்டையில் தாவூத், அனீஸ் இருவரும் படுகாயமடைந்துள்ளதாகக்த் தெரிகிறது. ரூ. 500 கோடி நில பேரத்தில் ஏற்பட்ட மோதலில் இந்தத் தாக்குதல் நடந்ததாகத் தெரிகிறது.
ஆனால், அனீ்ஸ் மட்டும் தான் தாக்கப்பட்டதாகவும் தாவூத் தாக்கப்பட்டதாக தகவல் இல்லை என்றும் மும்பை போலீசார் கூறியுள்ளனர்.
மும்பையில் உள்ள தாவூதின் உறவினர்கள் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று மறுத்துள்ளனர். தாவூதோ, அனீசோ யாரும் காயமடையவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பங்கள் தொடர்பாக தாவூத், அவரது சகோதரர்களை இந்தியா தேடி வருகிறது. அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியோடு அந் நாட்டு மறைந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இதை அந்த நாடு தொடர்நது மறுத்து வருகிறது.
பங்களாதேசுக்கு இடம் மாறும் தாவூத்:
இதற்கிடையே தீவிரவாதத்தை ஒடுக்க பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்கா கடுமையாக நிர்பந்திக்க ஆரம்பித்துவிட்டதால் தாவூத் அந் நாட்டை விட்டு வெளியேறி பங்களாதேஷில் குடியேற திட்டமிட்டுள்ளதாக முன்னர் வந்த தகவல்கள் தெரிவித்தன.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications