போதிய நீர் இல்லை-மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை
மேட்டூர்: மேட்டூர் அணையில் நீர் மட்டம் மிகக் குறைவாக இருப்பதால் திட்டமிட்டபடி வரும் 12ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படமாட்டாது என்று பொதுப் பணித் துறை தெரிவித்துள்ளது.
இதன் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளரான நாகராஜன் மேட்டூர் அணையை நேற்று பார்வையிட்டார். அணையின் வலது கரை, இடது கரை, கவர்னர் வியூ பாயிண்ட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு 58 அடியாகவே உள்ளது. இதனால் இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பில்லை.
மழை பெய்து அணையின் நீர் இருப்பு அதிகரித்தவுடன் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்றார்.
ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி பாசனத்துக்காக மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படுவது வழக்கமாகும்.












Click it and Unblock the Notifications