2 தலிபான் தலைவர்கள் சுட்டுக் கொலை - பாக். ராணுவம்
இஸ்லாமாபாத்: தலிபான் அமைப்பின் தீவிர ஆதரவு தலைவர்கள் இருவரை சுட்டுக் கொன்று விட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் பெரும் தாக்குதலைத் தொடுத்துள்ளது.
இந்த நிலையில், இன்று வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் 2 தலிபான் ஆதரவு தலைவர்களை சுட்டு வீழ்த்தி விட்டதாக ராணுவம் கூறியுள்ளது.
பெஷாவரில் உள்ள ஒரு சிறைக்கு, கைது செய்யப்பட்ட தலிபான் தீவிரவாதிகளை கொண்டு சென்றபோது அந்த வாகனத்தை தீவிரவாதிகள் தாக்க முயன்றனர். அப்போது நடந்த சண்டையில் 2 தலிபான் தலைவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட நபர்கள் டெஹ்ரிக் இ நிபாஸ் இ ஷரியா முகம்மதி என்ற தீவிரவாத அமைப்பின் துணைத் தலைவரான மெளலானா முகம்மது ஆலம் மற்றும் அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அமீர் இஸாத் ஆகியோர் என்று தெரிய வந்துள்ளது.
இந்த சண்டையில் ஐந்து வீரர்கள் காயமடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட இருவருமே சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டவர்கள். இன்று அவர்களை சிறையில் அடைக்க கொண்டு சென்றபோது தீவிரவாதிகள் அவர்களை மீட்க முயன்றனர். அப்போது நடந்த சண்டையின்போது வேனுக்குள் இருந்த இருவரையும் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்று விட்டனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications