மதுரை - தூத்துக்குடி இடையே ரசாயனத் தொழிற்சாலை அமைக்கப்படும்: அழகிரி
மதுரை: மதுரை, தூத்துக்குடி இடையே புதிய ரசாயனத் தொழிற்சாலை உருவாக்கப்படும். இதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் அழகிரி நேற்று மதுரை வந்தார். அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதுரை-தூத்துக்குடி இடையே ரசாயனத் தொழிற்சாலை தொடங்கப்படும். இதற்காக வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தென் மாவட்டங்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை ஒரே நேரத்தில் நிறைவேற்றிட யாராலும் முடியாது. வரும் 5 ஆண்டுகள் மத்திய அரசு நிலைத்து இருக்கும். அதனால் படிப்படியாக என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்த முடியுமோ, அதைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன். ஏற்கெனவே கூறியது போல, விவசாயிகளுக்குத் தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருந்துகளின் விலையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை கொண்டுவருவதற்கு சம்பந்தப்பட்ட தொழில் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
மதுரையில் வைகை கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடக்க விழா விரைவில் நடைபெறும். மேலும் ரூ.291 கோடியில் மேலூர் பகுதிகளில் காவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும். விடுபட்ட ஊர்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்றார் அழகிரி.
-
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications